எனக்கும் தருவாயா ஓரிடம்?

desert ss7.jpg

மணல் வனமாம் அத்தேகத்தில்
துகள்களாம் முதியவனை
தோள்களில் நீ தேரேற்றி
ஆனந்த நடமாடி
சித்திரமாம் உன் கையெழுத்தில்
தாளத்தில் நீ வரிஎழுத
ஆசையாய் நான் காத்திருக்கிறேன்
காற்றே

உன் சிறையில்லா சிறகுகளில்
தருவாயா
இச்சிறியவளாம் எனக்கும் ஓரிடம்?

DSCN5227.jpg

Advertisements

கனவுகளும் கற்பனைகளும் மற்றும் நானும்

P1120778

சிந்தனைகள் விடை கொண்டு போயின
நுண்ணறிவும் விடை கொண்டு போயினது
பகுத்தறிவு பகிரங்கமாய் விலகி நிற்க
சமூக வலைத்தளத்தில் நானும் நானும் 

இவள் அவளாக ஆக
அவன் இவனாக ஆக
கேளாமல் கண்டும் காணாமல் கொண்டும்
ஓடி ஓடி வலய
எண்ணங்களும் அபிப்ராயங்களும் அஞ்சாமல்
சுயசரிதங்களும் சித்திரங்களும் மிஞ்சாமல்
நான் நானாக எஞ்சாமல்
ஓடி ஓடி ஒளிய

இன்று எஞ்சி இருப்பது
கனவுகளும் கற்பனைகளும் மற்றும் நானும் நானும்!